என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » சீக்கிய கோவில்
நீங்கள் தேடியது "சீக்கிய கோவில்"
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து பாகிஸ்தானில் உள்ள சீக்கிய கோவிலுக்கு செல்லும் கர்த்தார்பூர் தனிப்பாதைக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று அடிக்கல் நாட்டினார். #KartarpurSahibcorridor #Sikhtemple #ImranKhan
இஸ்லாமாபாத்:
சீக்கிய மதத்தவர்களின் முதன்மை குருவான குரு நானக் தேவ் என்பவருக்கு பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் நகரில் மிக பிரமாண்டமான பொற்கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர இந்தியாவின் பல மாநிலங்களிலும், லண்டன், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் குர்த்துவாரா என்றழைக்கப்படும் சீக்கிய வழிபாட்டு தலங்கள் உள்ளன.
அவ்வகையில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், நரோவால் மாவட்டம், ஷக்கார்கர் அருகேயுள்ள கர்த்தார்பூரில் ராவி ஆற்றின் கரையில் குருத்துவரா தர்பார் சாஹிப் எனப்படும் சீக்கியர்களின் வழிபாட்டுத் தலம் அமைந்துள்ளது. சீக்கிய குருவான குரு நானக் தேவ் 18 ஆண்டுகள் வாழ்ந்த அந்த இடம், சீக்கியர்களின் புனிதத் தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
பாகிஸ்தானில் உள்ள கர்த்தார்பூர் குருத்துவாராவுக்கு சீக்கியர்கள் செல்வதற்கு வசதியாக, பஞ்சாப்பின் குருதாஸ்பூர் இருந்து பாகிஸ்தானுடனான சர்வதேச எல்லைவரை தனிவழி அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்காக பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரில் உள்ள தேரா பாபா நானக்கில் இருந்து சர்வதேச எல்லை வரை சீக்கிய ஆன்மிகப் பயணிகளுக்கு தனிவழி அமைக்கும் சாலை பணிகளுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கடந்த 26-ம் தேதி அடிக்கல் நாட்டினார்.
இதேபோல், பாகிஸ்தான் நாட்டு எல்லையில் இந்த பாதையை இணைக்கும் சாலைக்கான பணிகளுக்கு அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் இன்று அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் இந்தியாவில் இருந்து வந்துள்ள மத்திய மந்திரிகள் ஹர்சிம்ரத் கவுர் பாதல், ஹர்தீப் சிங் பூரி, பிரபல கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் மாநில மந்திரியுமான நவ்ஜோத் சிங் சித்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். #KartarpurSahibcorridor #Sikhtemple #ImranKhan

இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி நிதின் கட்காரி, ஹர்சிம்ரத் கவுர் பாதல், ஹர்தீப் சிங் பூரி, விஜய் சம்பாலா, பஞ்சாப் முதல் மந்திரி கேப்டன் அம்ரீந்தர் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த பாதையை அமைக்கும் பணிகளை இன்னும் 4 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதேபோல், பாகிஸ்தான் நாட்டு எல்லையில் இந்த பாதையை இணைக்கும் சாலைக்கான பணிகளுக்கு அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் இன்று அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் இந்தியாவில் இருந்து வந்துள்ள மத்திய மந்திரிகள் ஹர்சிம்ரத் கவுர் பாதல், ஹர்தீப் சிங் பூரி, பிரபல கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் மாநில மந்திரியுமான நவ்ஜோத் சிங் சித்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். #KartarpurSahibcorridor #Sikhtemple #ImranKhan
×

X